பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி! கடவுள் இருக்கான் குமாரு! ரசிகர்களின் அட்டகாசம்!

The photo has gone viral on the internet, with Ari fans chanting 'Big Boss title winner Ari Arjun, son of God'.

ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியானது 99-வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில், பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரசிகர் பெருமக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் கத்துக்க கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீஸனின் டைட்டில் வின்னராக ஆரி தான் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகின்ற நிலையில், ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.