பிக்பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகும் தேதி.! வெளியான சூப்பர் தகவல்.!

It has been reported that Big Boss Season 5 is set to launch on June 19th.

பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் 19-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கி அந்தாண்டே முடிவடைவது வழக்கம் .ஆனால் கடந்த சீசன் கொரோனா காரணமாக தாமதமாகவே தொடங்கி இந்த ஆண்டு தான் முடிவடைந்தது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் ஒளிபரப்பாகும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் 19-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் , கமல்ஹாசனே ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.