தல அஜித் பட நடிகையுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்.! அதுவும் ஹீரோ என்டரியாம்.!

Big Boss celebrity Ganesh Venkatram is all set to make an entry as a hero through the film in un paarvayil.

பிக்பாஸ் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் உன் பார்வையில் படத்தின் மூலம் ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் வெளியான ‘அபியும் நானும்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம்.அதன் பின் உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களைடையே பிரபலமானார் .

அதன்பின் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கணேஷ் தற்போது ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளார் . பாலிவுட்டில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கபிர் லால் இந்த படத்தினை இயக்குகிறார்.’உன் பார்வையில்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கணேஷூக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கவுள்ளார் .இவர் தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி போன்ற பல மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்டாகவும், பார்வதி நாயர் தொழிலதிபராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

unknown node