பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை...! தற்கொலைக்கு காரணம் என்ன?

Actress Jayasree has committed suicide by hanging herself from a fan in her house due to stress as she was out of work due to Corona.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்தில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ.

பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா கன்னட மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள், அதன்பின் போட்டி முடிவுக்கு பின் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதோடு, அவர்களுக்கு திரைப் பட வாய்ப்புகளும் அமைவது வழக்கமான ஒன்று.

ஆனால் ஜெயஸ்ரீயை பொறுத்தவரையில் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விரக்தி இருந்ததாக அவரது நண்பர் வட்டாரங்கள் கூறுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இல்லாமல் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை...! தற்கொலைக்கு காரணம் என்ன?