பவானியை தொடர்ந்து மீண்டும் மிரட்ட வருகிறார் மக்கள் செல்வன்... லாபம் படத்தின் ரிலீஸ் தேதி..?

It has been reported that the crew is planning to release the movie Lapam starring Vijay Sethupathi on April 2 or 16

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தினை ஏப்ரல் 2-ம் தேதி அல்லது 16-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .அதில் ஒன்று லாபம் . ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது லாபம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன . அதாவது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தினை ஏப்ரல் 2-ம் தேதி அல்லது 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.