தளபதி விஜய்க்கு வில்லனாகும் பேட்ட பட நடிகர்..?

It has been reported that actor Nawazuddin Siddiqui is in talks to play Vijay's villain in thalapathy 65.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திகி நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் (con agent ) காண் ஏஜென்ட் ஆகா நடிக்கவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கிடைத்த தகவல், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திகி நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிதக்கது.

தளபதி விஜய்க்கு வில்லனாகும் பேட்ட பட நடிகர்..?