23-வது திருமண நாள்.! ஷாலினி அஜித்குமார் பதிவிட்ட அழகான காதல் புகைப்படம்...

அஜித் - ஷாலினி ஆகிய இருவரும் தங்களது 23வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில், அவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்.

அஜித் – ஷாலினி ஆகிய இருவரும் தங்களது 23வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில், அவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்.

நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சுற்றுல்லா சென்றாலோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு சென்றாலோ அவருடைய புகைப்படங்களும், அவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

unknown node

Ajith Kumar and Shalini celebrate 23rd wedding anniversar [Image Source : Twitter]

அஜித் – ஷாலினி காதல் திருமணம்:

தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகளில்  அஜித் குமாரும் ஷாலினியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான ஷாலினி பின்னர், நடிகையாக கலக்க தொடங்கினார். காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம் திரைப்படத்தில்.

unknown node

Ajith Kumar and Shalini celebrate 23rd wedding anniversar [Image Source : Twitter]

முதல் பட வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  தான் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். ஆனால், தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வைத்திருந்து, ஓராண்டுக்கு பிறகு  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

unknown node

Ajith Kumar and Shalini celebrate 23rd wedding anniversar [Image Source : Twitter]

கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்து கொண்ட, இந்த தம்பதிகள் இருவரும் நேற்று தங்கள் 23 வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.

unknown node

Ajith Kumar and Shalini celebrate 23rd wedding anniversar [Image Source : Twitter]

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை ஷாலினி ஒரு காதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு, 23 வது திருமண நாளை குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பலரும் வாழ்த்துக்களை ஒரு பக்கம் குவிக்க, மறுபக்கம் இந்த புகைப்படம் இணையத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

unknown node

நடிகர் அஜித் குமார் , கடைசியாக எச் வினோத் இயக்கிய துணிவு படத்தில் நடித்திருந்தார். அஜித்குமார் தனது 62வது படப்பிடிப்பை இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கவிருந்தார். இருப்பினும், கடந்த மாதம் நடிகரின்  தந்தையை இழந்ததை அடுத்து, படப்பிடிப்பு இப்போது மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.