இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டீசர், டிரைலர் குறித்த எந்த அப்டேட்டும் அறிவிக்கப்படவில்லை.
unknown nodeஇதனால் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் “பீஸ்ட் ” அப்டேட் கேட்டு வந்தனர். இதனை பார்த்த நெல்சன் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் “நாளை” என்று மட்டும் ட்வீட் செய்திருந்தார்.
unknown nodeஇதனை பார்த்த ரசிகர்கள் நாளை பீஸ்ட் அப்டேட் தான் வரப்போகிறது என்று எதிர்பார்ப்புடன் இன்று காத்திருந்தார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த படி பீஸ்ட் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown node