இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeசன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
unknown nodeபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் அந்த அளவிற்கு நல்ல விமர்சனத்தை பெறவில்லை, ஆனால் படம் விஜய் படம் என்பதால் வசூல் ரீதியாக படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். உலகம் முழுவதும் 230 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது.
unknown nodeஇந்த நிலையில், திரையரங்குகளில் படம் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் எப்போது வெளியாகும் என காத்திருந்தார்கள்.அதன்படி , பீஸ்ட் திரைப்படம் வரும் மே 11-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ், Sun NXT ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown node