நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது.
unknown nodeThunivu Expected Tomorrow [Image Source : Twitter]
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரேம் துணிவு படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்றை கூறியுள்ளார். துணிவு படம் குறித்து பேசிய அவர் ” துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம்.
இதையும் படியுங்களேன் –அந்த மாதிரி நடிக்க மட்டுமே கூப்பிடுறாங்க…கவர்ச்சி நடிகை சோனா வேதனை.!
unknown nodePrem Thunivu [Image Source : Twitter]
அஜித் சாருடன் 15நாட்கள் படத்தில் நடித்தேன். அவர் ஒரு பிரபலம் என்பதை நாம் மறந்துவிடுவோம், அந்த அளவிற்கு எல்லோரிடமும் சகஜமாக பழகுகிறார். அவருடன் நடித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. துணிவு படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக விருந்தாக அமையும்.
unknown nodeThunivuTrailer [Image Source : Twitter]
துணிவு திரைப்படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத விதமாக படத்தின் ட்ரைலரை மிக பிரமாண்டமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.