சென்னை :மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாவதைப் பார்த்து வெறுத்துப்போன சிம்பு ரசிகர்கள் எப்போது சிம்புவின் 48-வது படம் தொடங்கும் எனக் காத்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய படம் என்பதால் இந்த படத்தைத் துவங்கக் காலதாமதம் ஆகும் எனவும் கூறப்பட்டது.
இருப்பினும், அடுத்தப்படுத்தின் அப்டேட்டாவது கொடுங்கள் என்கிற எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள் இருந்த நிலையில் , அப்டேட் தானே வேணும்? இந்தாங்க பெரிய அப்டேட்டா தருகிறேன் என்கிற தோரணையில், சிம்பு சமீபத்தில் அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்து இருந்தார். அதில் 2கிட்ஸ்களை மிரள வைக்கும் விதமாகத் தான் 90ஸ்கிட்ஸ் சிம்புவாக வரப்போகிறேன் என்பது போலக் கூறியிருந்தார்.
அதற்கு முன்பே வல்லவன், மன்மதன், தம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை எல்லாம் சேர்ந்தால் ஒரு சிம்பு எப்படி இருப்பேனோ அப்படி வரப்போகிறேன் என்பது போலவும் கூறியிருந்தார். சிம்பு சொன்னதைப் பார்த்துவிட்டு தலைவன் பெருசா சம்பவம் செய்யப் போகிறார் எனப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிம்புவின் அடுத்த படத்தினை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சிம்புவின் 49-வது திரைப்படமாகவும் உருவாகவுள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இதற்கு முன்பு நடித்த வல்லவன், மன்மதன் ஆகிய படங்களின் ரெபரென்ஸ் காட்சிகள் என பல விஷயங்கள் கவர்ந்து இழுக்கும் வகையில் வைத்துள்ளார்கள்.
க்ரியேட்டிவான பல விஷயங்கள் போஸ்டரில் இருப்பதன் காரணமாகக் கண்டிப்பாகப் படமும் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கண்டிப்பாக 90ஸ் காலகட்டத்தில் பார்த்த சிம்புவையும் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
unknown node