பிக்பாஸில் ரசிகர்களை கவர்ந்த பாலாஜி-ஷிவானி ஜோடி புறாக்கள்,அடுத்து சீரியலில் ஹீரோ-ஹீரோயினாக .!

It has been reported that Balaji and Shivani will co-star in a new serial airing on Vijay TV

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் பாலாஜி மற்றும் ஷிவானி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் .

அதிலும் பாலாஜி -ஷிவானி ஜோடி செய்யும் அலப்பறைகள் பலரையும் கவர்ந்தது .வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள பிக்பாஸ் கொண்டாட்டத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில் பாலாஜி-ஷிவானி ரசிகர்களுக்கென்று ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.அதாவது விஜய் டிவி புதிய சீரியல் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் ,அதில் ஹீரோவாக பாலாஜியையும் , ஹீரோயினாக ஷிவானியையும் விஜய் டிவி நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது ஒரு புறம் இருக்க மறுபுறம் அந்த புது சீரியலில் ஏற்கனவே பகல்நிலவு சீரியலில் ஷிவானியுடன் நடித்த அஸீம் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எப்படி ஆயினும் ஷிவானியை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.