"சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜா ".. மிரட்டலாக வெளியான பஹிரா டீசர்..!

The crew has released the teaser for the film Pahira directed by Adik Ravichandran and starring Prabhu Deva.

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்திற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படதிற்கு இசையமைப்பாளர் கணேஷ் சேகர் இசையமைத்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு 50% முடிந்த நிலையில், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் படத்திலிருந்து வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் மாறி , மாறி வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் பிரபுதேவா மிரட்டியுள்ளார். இதோ அந்த டீசர்,

unknown node