சிவகார்த்திகேயன் முயற்சியால் மீண்டும் 'அயலான்' படப்பிடிப்பு தொடக்கம்..! வெளியான சூப்பர் தகவல்...

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால்“அயலான்”திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

unknown node

Ayalaan Sk Movie [Image Source: Google]

ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து கூறியிருந்தார்கள்.பிறகு இந்த திரைப்படம் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன்-அண்ணாச்சி என்ட்ரி செதறு செதறு.. OTT-யில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

unknown node

Ayalaan Sk Movie [Image Source: Google]

இதனையடுத்து பிறகு மீண்டும் பண பிரச்சனை காரணமாக கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்காமல் போனதாகவும், தற்போது சிவகர்த்திகேயன் முயற்சியினால் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அதி நவீன கிராஃபிக்ஸ் வேலைகளுடன், அப்டேட் வெர்ஷனாக மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

Ayalaan Sivakarthikeyan [Image Source: Google]

அதன்படி, தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் “அயலான்” படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியீட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் இணைவார். இதற்கிடையில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் OTT-யில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.