இன்று கவின் ரசிகர்களுக்கு அட்டகாசமான அதிரடி அப்டேட்..?

Director Venkat Prabhu, Lokesh Kanagaraj, Nelson Dilip Kumar, Ravi Kumar, Ajay Gyanamuthu and Vignesh Sivan are releasing the motion poster of the movie Lift.

லிஃப்ட்  படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிடுகின்றார்கள்.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் .

தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினீத் வரபிரசாத் என்பவர் இயக்கி வருகிறார். கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் கடந்த ஆண்டு வெளியானது அதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்கள்.