இது தான் பிரமாண்டம்... "அவதார் 2" திரைப்படத்தின் அசத்தல் டிரைலர் இதோ..!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்ககத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்ககத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை. செய்தது 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது. முதல் பாகத்திற்கு அமோகமாக வெற்றி கிடைத்த தால் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

unknown node

இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்திற்கான டீசர் வெளியானது. டீசரை பார்த்த அனைவரும் அடடா இது அல்லவா பிரமாண்டம் என கூறினார்கள்.

unknown node

இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து தற்போது அவதார் 2 படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வரும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அசத்தும் அற்புத காட்சிகள் நிறைந்து, தண்ணீர் தேசத்தில் நடக்கும் பிரச்சனைகள் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளன. அதைபோல் ஒவ்வொரு காட்சிகளில் வரும் பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

unknown node

மேலும், அவதார் 2 படம் இந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில்‘ரோஸ் ‘கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node