நடிகர் கௌதம் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார்.
படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார். படத்திற்கு “ஆகஸ்ட் 16 1947” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 16ஆம் தேதி 1947 என்று தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆதலால், சுதந்திரமடைந்த மறுநாள் என்ன ஆனது அன்று என்னவெல்லாம் நடந்தது என்று படத்தின் கதைக்களம் இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி படத்தின் போஸ்டரும் ஒரு பெரியட் படத்தின் போஸ்டர் போல போஸ்டராக வெளியாகியுள்ளது இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown node