"தற்கொலை தனக்கு தொடர்பில்லை"நடிகை நிலானி பரபரப்பு பேட்டி..!

சென்னையில் உதவி இயக்குனர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் உதவி இயக்குனர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார்.

unknown node

திருவண்ணாமலையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனரான காந்தி லலித்குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரை நடிகையான நிலானி என்பவரை காதலித்து வந்த நிலையில் காந்தி லலித்குமாரை பிரிந்ததும், நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

unknown node

சமூக வலைதளங்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த நடிகை நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலையில் தன் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கும் தனக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

unknown node

தற்கொலை செய்து கொண்ட காந்தி லலித்குமாரை தான் காதலித்ததும், அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்ததும் உண்மை தான் என ஒப்புக்கொண்ட நிலானி, ஆனால் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் விட்டு விலகியதாகவும் கூறினார். அவரை விட்டு விலகியதால் கடந்த 2 மாத காலமாக தன்னை அடித்து துன்புறுத்தியதோடு மட்டுமில்லாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்து வந்ததகாவும் கூறினார்.

DINASUVADU