ஆர்யாவுக்கு கிடைக்க வேண்­டி­யது நிச்­ச­யம் கிடைக்­கும் -பா.ரஞ்சித்.!

நடிகர் ஆர்யாவை இயக்குனர் பா.ரஞ்சித் புகழ்ந்து பேசியுள்ளார்.

நடிகர் ஆர்யாவை இயக்குனர் பா.ரஞ்சித் புகழ்ந்து பேசியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது.இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்திற்காக நடிகர் ஆர்யா மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஆர்யா ஓராண்­டுக்கும் மேலாக தீவிர குத்துச் சண்டை பயிற்­சி­யில் ஈடுபட்டார். படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சி தான். படத்தில் சண்­டைப் பயிற்­சி­யா­ளர்­க­ளான இரட்­டை­யர் கள் அன்பறிவு பணியாற்றியுள்ளனர். உழைப்­புக்கு கைமேல் பலன் எங்­கள் குழு­விற்கு கிடைத்­துள்­ளது. நடிகர் ஆர்­யா­வுக்­குக் இனி கிடைக்க வேண்­டி­யது கண்டிப்பாக  கிடைக்­கும்” என்று தெரிவித்துள்ளார்.