அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா..?

It has been reported that actor Arya will play the villain in the upcoming Pushpa movie starring Allu Arjun.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி என்ற திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்யா தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் அனைவரும் எதிர்பார் எதிர்பார்க்கும் புஷ்பா திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது நடிகர் விஜய் சேதுபதிதான் ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை , தற்போது இந்த புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.