ரத்த கோலத்தில் அர்ஜுன் தாஸ்... மிரட்டும் "அநீதி" டைட்டில் டீசர்..!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் வெளியீடு.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் வெளியீடு.

கைதி, மாஸ்டர், அந்தகாரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அர்ஜுன் தாஷிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார்.

இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவென நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான டைட்டிலை டீசராக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு “அநீதி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசரில் அர்ஜுன் தாஸ், ரத்தம் சொட்டச் சொட்ட மிகவும் கோபத்துடன் இருப்பது போன்று உள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

unknown node