அவர் கூட எல்லாம் என்னை கம்பேர் பண்ணாதீங்க! டென்ஷனான அர்ஜுன் தாஸ்!

அவரை போல தான் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸும் ஹீரோ மற்றும் வில்லன் என எல்லா கதாபாத்திரங்களிலும் தற்போது நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட

Arjun Das

Arjun Dasகைதி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவருடைய முகபாவனையும், குரல் அம்சமும் பிரபல நடிகரான ரகுவரனை போலவே இருப்பதால் பலரும் ரகுவரனுடன் அர்ஜுன் தாஸை ஒப்பிட்டு பேசுவது உண்டு. ரகுவரணும் ஒரு காலத்தில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கி கொண்டு இருந்தார்.

READ MORE –10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

அவரை போல தான் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸும் ஹீரோ மற்றும் வில்லன் என எல்லா கதாபாத்திரங்களிலும் தற்போது நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது கூட அர்ஜுன் தாஸ்போர்என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

READ MORE –தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷனுக்காக அர்ஜுன் தாஸ் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது தன்னை ரகுவரனுடன் கம்பேர் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

READ MORE –சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

இது குறித்து பேசிய அர்ஜுன் தாஸ் ” என்னை சிலர் அப்படி சொல்வதை நான் பார்த்திருக்கிறேன் என்னுடைய குரல் ரகுவரன் சார் மாதிரி இருக்கு என்று அப்படி சொல்பவர்கள் சொல்லட்டும் ஆனால் அவர் எவ்வளவு பெரிய நடிகர் அவர் கூட எல்லாம் என்னை கம்பேர் பண்ணாதீங்க. அவருடைய படங்களை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். எனவே, அவரை போல ஒரு பெரிய நடிகருடன் என்னை தயவு செய்து கம்பேர் பண்ணாதீங்க” என நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.