அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்க தானா..? ஐஸ்வர்யா ராஜேஷ் ‘நச்’ பதில்.!

Default Image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று பலரும் கூறுவது உண்டு.

Nayanthara And Aishwarya Rajesh
Nayanthara And Aishwarya Rajesh [Image Source: Google]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன்  உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும்நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Aishwarya Rajesh In DriverJamunaPressMeet
Aishwarya Rajesh In DriverJamunaPressMeet [Image Source: Twitter]

அதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். அதற்கு அவரும் தயக்கம் காட்டாமல் பதில் அளித்து வந்தார் . அப்போது செய்தியாளர் ஒருவர் “ நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா.? என்பது போல கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படியுங்களேன்- வாய்ப்பு இல்லாததால் தாராள கவர்ச்சி… அந்த மாதிரி தொடரில் அசால்ட்டாக நடித்த அஞ்சலி.!

Aishwarya Rajesh In DriverJamunaPressMeet
Aishwarya Rajesh In DriverJamunaPressMeet [Image Source: Twitter]

இந்த கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஏங்க இது என்ன வம்பா இருக்கு..? நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை.  எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். கதாநாயகன் இல்லாமல் படம் வேண்டாம் என்று நான் முடிவு செய்துநடிக்கவில்லை. நல்ல கதையம்சம் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என பதில் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்