எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி எம்ஜிஆராக தலைவி படத்தில் நடித்த அரவிந்த்சாமி ட்வீட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு நன்றியை கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த்சாமியும் ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் கூட ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஓட்டி ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்த புகைபடங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இன்று எம்ஜிஆரின்நினைவு தினம் என்பதால் நடிகர் அரவிந்த்சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு மேல் “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. இயக்குனர் ஏ.எல்.விஜய் & தயாரிப்பாளர்களுக்கு நன்றி ” என்றும் பதிவிட்டுள்ளார்.
unknown node