சத்தமில்லாமல் தனது மகள் திருமணத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் "இசைப்புயல்" என

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ரோஜா,மின்சாரக்கனவு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

unknown node

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு நேற்று ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.  ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம் படத்தின் முன்பு இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

unknown node

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தி தனது மகளின் திருமணம் நடந்ததை அறிவித்துள்ளார்.

unknown node