மீண்டும் இணையும் சூர்யா & முருகதாஸ் கூட்டணி.??

It has been reported that director AR Murugadoss will direct Surya's next film.

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் முடித்து விட்டு படத்தை ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் அடுத்ததாக இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா எந்த இயக்குனருடன் இணையப்போகிறார் என்பதை குறித்த தகவல்கள் தினம் தினம் வெளியாகி கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் கூட சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா வாடி வாசல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான கஜினி, 7 ஆம் அறிவு ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.