Anupama Parameswaran: பிரேமம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன். இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவில் கொடி சமீபத்தில் வெளியான சைரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடித்திருக்கும் படங்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றே கூறலாம்.
READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?
இந்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் அனுபமா ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அனைவரும் பார்த்து சிரிக்க கூடிய அளவிற்கு ஆபர் ஒன்றை கொடுத்து இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார்.
READ MORE –தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான நீர்யானையின் வீடியோ ஒன்றை வெளியீட்டு “இதை பரிசா கொடுத்தா நான் உன்னுடையவள்” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த கேலியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனுபமா கொடுத்திருக்கும் இந்த சலுகை ரசிகர்களுக்கு நல்லது மற்றும் வேடிக்கையானது. ஆனால் மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், வனவிலங்குகளைக் வளர்ப்பதும் நம் நாட்டில் குற்றமாகும்.
unknown nodeanupama parameswaran [File Image]
READ MORE –சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!
நீங்கள் அதை செய்ய விரும்பினால், சிறப்பு அனுமதி தேவை. அரிதான விலங்குகளில் ஒன்றான நீர்யானையை கொண்டு வந்து, அதை அனுபமாவுக்கு பரிசளிப்பது கடினமான வேலை தான். மேலும் நடிகை அனுபமா தற்போதுதில்லு ஸ்கொயர்என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
