மீண்டும் கொரோனாவிற்கு பலியான பிரபல தயாரிப்பாளர்.!

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த கொரோனாவால் பல திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

unknown node

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போக்குரி ராமராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மரணம் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.