சுல்தான் படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் தான் – கார்த்தி..!

Actor Karthi has said that Yuvan Shankar Raja is another hero of the movie Sultan

சுல்தான் திரைப்படத்தின் மற்றோரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா தான் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திகிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசைமட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் நன்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி கூறியது ” படத்தின் மற்றோரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா தான். படத்தின் வெளியீடு நேரத்திற்காக நங்கள் வேலை செய்து கொண்டபோது, அவரிடம் பின்னணி இசையமைக்க மட்டும் கேட்டோம். அவரும் உடனடியாக சரி என்று கூறினார். அவரது குழு 10 நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அதற்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார்.