2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு..!

The Kalaimamani Awards for 2019 and 2020 have been announced on behalf of the Government of Tamil Nadu.

2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பட்டுள்ளது.

கலைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தத கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆம் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, மற்றும் சிவகார்த்திகேயன், சௌகார் ஜானகி, மற்றும் ராமராஜன், தயாரிப்பாளர் ஐசரி வேலன், கலைப்புலி தாணு, உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர் டி.இமான், தினா, இயக்குனர் கௌதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியா அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளரான ரகுநாத ரெட்டி, நடன இயக்குனர்கள் சிவசங்கர் ,ஸ்ரீதர், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார்தங்கம், தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், காதல் மதி, எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகனிற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பின்னணி பாடகி ஜமுனா ராணி, சுஜாதா மோகன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமீதா, டிவி நடிகைகளான நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற தேர்வானவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

unknown node