இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் , லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “ஜெய் பீம்”. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது.
unknown nodeஇப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்றது. திரையரங்குகளில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர்.
unknown nodeஓடிடியில் வெளியானாலும் இந்த திரைப்படம் உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட தோடு பல விருதுகளையும் குவித்தது. இந்த நிலையில், தற்போது12வது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைஜெய்பீம்வென்றுள்ளது.
unknown nodeமேலும் மிகச்சிறப்பாக இந்த படத்தில் ராஜ்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
unknown node