வயதான தோற்றத்தில் கார்த்தி...!! அடுத்த படத்திற்கான அறிவிப்பு.!

An update for Karthi's 22nd film titled Motion Poster First Look has just been released

கார்த்தியின் 22 வது படத்திற்கான தலைப்பு மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் என படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு 70 % முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து படத்தின் அடுத்த அப்டேட்டன தலைப்பு மோஷன் போஸ்டர் பர்ஸ்ட் லுக் என படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சர்தார் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node