அண்ணாச்சி.. நீங்க இங்கேயும் வந்துடீங்களா..? லெஜண்ட் சரவணன் வரார்... செதறு..செதறு..!

தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள். தற்போது தமிழ் சினிமாவில் "தி லெஜண்ட்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள். தற்போது தமிழ் சினிமாவில் “தி லெஜண்ட்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை இயக்குனர்கள் ஜெரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

unknown node

இவர்கள் ஏற்கனவே அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை சரவண அருளே தயாரிக்க,  படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள், மற்றும் டிரைலர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்றது.

unknown node

அதிரடி, ஆக்சன் கலந்த இந்த திரைப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த நிலையில், தற்போது அருள் அண்ணாச்சி அணைத்து சமூக வலைதளபக்கங்களிலும் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார். அதற்கான வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு அறிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அண்ணாச்சி நீங்க சோஷியல் மீடியாவிலும் வந்துவீட்டீர்களா..? என கேட்டு வருகிறார்கள்.

unknown node