என்ன கோர்த்து விட்ர மாதிரி தோணுது என்று கூறும் அனிதா .! ஆவேசமாக பேசும் நிஷா .!

Nisha gets into an argument with Anita to tell her what the show looks like in the second promo of the Big Boss show.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் என்ன கோர்த்து விடுகிற மாதிரி தோன்றுகிறது என்று அனிதா கூற நிஷா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் . இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்

எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு, இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்லும் போது எனக்கு கோர்த்து விட்ர மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது என்று அனிதா கூறுகிறார். மேலும் இது தனிப்பட்ட காரணங்கள் கிடையாது என்று அனிதா கூற நிஷா, ரியோ மட்டும் பொங்கி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.பேர் வைக்க வேண்டும் என்ற ஐடியா நீங்கள் தான் கொடுத்தீர்கள் என்று அனிதா கூற,அதனை ஏற்று கொள்ளாத நிஷா, பாஸ்ஸி, பப்பட் என்ற ஐடியாவை நானா கொடுத்தேன்? என்று பொங்கி எழுந்து அனிதாவிடம் கேட்கிறார்.

அப்போது பாலாஜி நிஷாவை சமாதானப்படுத்த வர அவரை திட்டுகிறார். அதனையடுத்து இந்த கான்செப்டே வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்ல என்று நிஷாவிடம் கேட்க ,ரியோவை காண்பித்து கான்செப்ட் வேண்டாம் என்று அவன் சொன்னான் என்று நிஷா கூறுகிறார்.அப்போது அனிதா கான்செப்ட் வேண்டாம் என்று சொல்லி விட்டு நீங்களும் சேர்ந்து ஏன் பெயர் வைக்கின்றீர்கள் என்ற கேள்வியை நிஷாவிடம் எழுப்புவதோடு புரோமோ முடிவடைகிறது.

unknown node