தளபதி 65 படத்தின் முதல் பாடலை முடித்துக்கொடுத்த அனிருத்..!!

Composer Anirudh has composed the first song of thalapathy 65

தளபதி 65 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார்.

தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த  படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் ஜார்ஜாவில் குளிர் மட்டும் கனமழை பெய்து வருவதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜார்ஜியாவில் சில ஆக்‌ஷன் போர்ஷன்களும், ஒரு பாடலும் ஷுட் செய்யப்படுகின்றன. அதற்கான பாடலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.