இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பிசாசு 2”. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
unknown nodeராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் முக்கியமாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இதையும் படியுங்களேன்-நீங்க என்ன வேணா சொல்லுங்க…விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி.!
unknown nodeஇந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
unknown nodeஇந்த நிலையில், இந்த திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்க கூடிய படமாக இருப்பதால், படத்தில் ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் நீக்கி விட்டதாக சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.