நடிகையாகவும், பாடகியாகவும், கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக பெண்களுக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களிலே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், நேற்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
unknown nodeAndrea Jeremiah [Image Source ; Google]
மேலும், பொதுவாக சினிமாவில் ஒரு நடிகைக்கு பிறந்த நாள் என்றால் அவருடைய குழந்தை பருவ புகைப்படம் வெளியாகி வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஆன்ட்ரியாவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறதை.
இதையும் படியுங்களேன்-தியேட்டரில் ரசிகர்களை பதம் பார்த்த 2022 பிளாப் லிஸ்ட் படங்கள்…!
unknown nodeபுகைப்படத்தில் ஆண்ட்ரியா குட்டை பாவாடை அணிந்து கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் எப்போதும் ரொம்ப அழகு…நம்ம ஆண்ட்ரியா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeAndrea Jeremiah [Image Source ; Google]
மேலும் , நடிகை ஆண்ட்ரியா தற்போது மனுசி, மாளிகை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.