தங்கலானை கண்டு ஓட்டம் எடுத்த அந்தகன்! பிரசாந்த் எடுத்த அதிரடி முடிவு?

அந்தகன் : ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகிறது.

andhagan vs Thangalaan

அந்தகன் :ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படமும் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரு பக்கம் இரண்டு படமும் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால் இரண்டு படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்தது. அதே சமயம், பிரசாந்த் நீண்ட காலங்களுக்கு பிறகு படத்தில் நடித்துள்ளதால் அந்த படம் தனியாக வந்தால் கூட நல்ல ஓப்பனிங் கிடைக்கும் ஆனால், தங்கலான் படத்துடன் வந்தால் ஓப்பனிங் இருக்காது என்ற பேச்சுகளும் எழுந்தது.

அந்த பேச்சுக்களை சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் பார்த்தாரோ என்னவோ அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவெடுத்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகவிருந்த அந்த படம் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

Andhagan [file image]

படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரசாந்த் ரசிகர்கள் பலரும் விரைவாகவே படத்தை கொண்டாட ரெடி ஆகிவிட்டார்கள். மேலும், இந்த அந்தகன் படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த்,பூவையர், சமுத்திரக்கனி, யோகி பாபு,உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான். கதையில் சில மாற்றங்களை செய்து இயக்குனர் தியாகராஜன்  இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.