ஹைடெக் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ஆனந்தியின் ' 'கமலி‌ From நடுக்காவேரி'.! ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

It has been announced that the movie 'Kamali‌ From Nadukkaveri' starring actress Anandi will be released on February 19.

நடிகை ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கமலி‌ From நடுக்காவேரி’ படத்தினை வரும் பிப்ரவரி 19-ம் தேதி திரையில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.கயல் ,சண்டி வீரன்,பரியெறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் தனது காதலனான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில் ஸோம்பி ரெட்டி உள்ளிட்ட சில படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

அவ்வாறு இவர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘கமலி‌ From நடுக்காவேரி’ . இந்த படத்தினை ராஜசேகர் துரை இயக்கியுள்ளார். ஐ.ஐ.டி. பின்னணியில் ஹைடெக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், பிரியதர்ஷினி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.தீன தயாளன் இசையமைத்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ‘கமலி‌ From நடுக்காவேரி’ படத்தினை வரும் பிப்ரவரி 19-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.