இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்னனர். நாளை வெளியாகும் அறிவிப்பில் கோப்ரா படம் எந்த தேதியில் வெளியாகும் என்று தெரிந்துவிடும்.
unknown node