விஜய்யை கன்னத்தில் பளார்னு அடிச்சுட்டேன்! உண்மையை உடைத்த பிரபல நடிகை?
Vijay ஒரு படங்களில் நடிக்கும் போது அந்த படத்தில் கன்னத்தில் அறைவது போல காட்சிகள் இருந்தால் அந்த காட்சி மக்கள் பார்க்கும் போது உண்மையாக இருக்கவேண்டும் என்று படக்குழுவினர் உண்மையாகவே அறைய வைத்து படமாக்குவார்கள். சரியக சொல்லவேண்டும் என்றால் கன்னத்தில் அறையும் போது நகர்ந்து சற்று நகர்ந்து செல்வார்கள்.
READ MORE – நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!
அப்படி அந்த மாதிரி காட்சிகள் எடுக்கும் போது ஒரு சிலர் சரியாக நகர்ந்து சென்றாலும் ஒரு சிலருக்கு உண்மையாகவே கன்னத்தில் பளார் என அறை விழுந்துவிடும். அப்படி தான் நடிகர் விஜய்க்கும் நண்பன் பட சமயத்தில் கன்னத்தில் பளார் என அறை விழுந்துள்ளது. இந்த தகவலை நண்பன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுயா பகவத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!
இது குறித்து பேசிய அனுயா பகவத் ” நண்பன் படத்தில் ஒரு காட்சியில் நான் விஜய்யை அறைவது போல ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சி எடுக்கும் போது நான் உண்மையிலேயே விஜய் கன்னத்தில் அறைந்து விட்டேன். எதிர்பாராத விதமாக நான் அடிக்கும்போது அவர் நகர்வார் என்று நான் நினைத்தேன்.
Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…
ஆனால், அவர் நகரவில்லை கன்னத்தில் பளார் என அறை விழுந்துவிட்டது. இதுவரை நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் அப்படியான காட்சிகளில் நான் யாரையும் அடித்ததில்லை ஆனால் விஜய் கன்னத்தில் தவறுதலாக அறைந்துவிட்டேன்” என அனுயா பகவத் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த நண்பன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.