தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் செய்தது. இந்த படத்தின் மூலம் தமிழிலும் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
unknown nodeஇந்த படத்தின் வெற்றியின் மூலம் இவருக்கு நிறையை விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருகிறதாம். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனம் தங்களது நிறுவனத்தின் புகையிலை விளம்பரத்தில் நடித்து கொடுங்கள் என அல்லு அர்ஜுனிடம் கேட்டுள்ளார்களாம்.
unknown nodeஇதில் நடிக்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டாராம். ஏனெனில் அவர் புகையிலை விளம்பரத்தில் நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை தானே அமைத்து கொடுத்து விடுவது போல ஆகிவிடும்” என்பதால் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeஇதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் புகையிலை விளம்பரங்களில் நடித்திருந்தார். இதற்காக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில் தான் இனிமேல் புகையிலை விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.