பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுன்..!

Actor Allu Arjun has also arranged vaccinations for the families of the employees who work for him.

நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.

மேலும் இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன்தனது குடும்பத்தின் அங்கமான பணியாளர்கள் ( 45 வயது மேற்பட்டோருக்கு) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் பலர் அல்லு அர்ஜுனை பாராட்டி வருகிறார்கள்.