எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே .... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி!

Ari, the winner of the Bigg Boss Season 4 title, has released a post thanking the fans that all the praise is for you who voted.

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகியுள்ள ஆரி, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு தான் என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் றன்னராக பாலாஜியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வின்னராக ஆரியும் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்களும் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஆரி, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு தான் என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் ஆரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பதிவு,

unknown node