மீண்டும் புது தொடருடன் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பெற தயாராகும் ஆலியா

ஆலியா மானஸா தனது அடுத்த சீரியலினை குறித்து புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஆலியா மானஸா தனது அடுத்த சீரியலினை குறித்து புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.

அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததும், Alia Syed என்ற குழந்தையின் பெயரையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது . வழக்கமாக குழந்தையுடன் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிடும் ஆலியா தற்போது தனது அடுத்த சீரியலை குறித்து பகிர்ந்துள்ளார். ஆம் விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த சீரியலையும் ராஜா ராணி தொடர் இயக்குநரான பிரவீன் இயக்க போவதாக அறிவித்துள்ளார். மீண்டும் சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் செல்ல பிள்ளையாக வலம் வர போகிறார் ஆலியா. இந்த தகவல் அவரது ரசிகர்கள் இடையில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node