அய்யோ இதில நிஜ காஜல் யாரா இருக்கும்.? கணவரே குழம்பிட்டாரு போலயே.! வைரலாகும் புகைப்படம்.!

Netizens who saw the photo posted by actress Kajal Agarwal are questioning who the real Kajal is.

நடிகை காஜல் அகர்வால் வெளிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நிஜ காஜல் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று,அவர்களது ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள இவர் தற்போது‌ இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களைடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலையை பார்க்க சென்றுள்ளனர் .அங்கு ஒரு பக்கம் காஜல் மற்றும் மறுபுறம் மெழுகு சிலையாக உள்ள காஜலுக்கும் நடுவில் நின்றவாறு கௌதம் கிச்லு புகைப்படம் எடுத்துள்ளார்.அதனை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அதனை பார்த்த நெட்டிசன்கள் இதில் உண்மையான காஜல் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

unknown node