வட இந்தியாவிலும் வெளியாகும் அஜித்தின் வலிமை..!!

Producer Bonnie Kapoor has said that the movie Valimai will be released in North India as well

வலிமை திரைப்படம் வட இந்தியாவிலும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” படத்திற்கான முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது சண்டைக்காட்சிகளில் நடிகர் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். அவரது ரசிகர்களுக்கு மட்டும் படம் உருவாகாமல் அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை வட இந்தியாவிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்றும் கூறியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, பாவெல் நவகீதன், வி.ஜே பானி, யோகி பாபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா பணியாற்றிவருகிறார்.