அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் : பிரபல நடிகை ஓபன் டாக்
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா துறையை பொறுத்தவரையில், மிகவும் பிரபலமானவர்கள் கூட அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதுண்டு.
இந்நிலையில், பிரபல வட இந்திய நடிகை அவருக்காக 3 கதைகள் வைத்திருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரபல நடிகை நீது சந்திரா அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நடிகர் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது.” என தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.