வலிமை படத்திலிருந்து கசிந்த தல அஜித்தின் பைக் ஸ்டண்ட் புகைப்படம்.!

The photo of Thala Ajith wheeling the bike during bike chase from the movie Valimai is going very viral on social media.

வலிமை படத்திலிருந்து தல அஜித் பைக் சேஸிங்கின் போது பைக்கை வீலிங் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார் .போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷூ ,யோகி பாபு,பேர்லி மன்னி ,கார்த்திகேயா உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது .

படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது . சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.மேலும் இந்த படத்தில் பைப் ரேஸிங் காட்சிகளை டூப் போடாமல் நடித்துள்ளார் தல அஜித்.

அதில் தல அஜித் பைக் வீலிங் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தீபாவளிக்கு படத்தின் எந்த அப்டேட்டும் வெளி வராமல் சோகத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் இந்த புகைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது .மேலும் அந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

unknown node