மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பதற்கு உதவிய தல அஜித்.!

A drone with the help of Thala Ajith has been used at the unveiling of the bronze statue of the late Jayalalithaa.

மறைந்த ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பு விழாவில் தல அஜித் உதவியுடன் உருவான ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த வீடான வேதா நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததுடன் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலையையும் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அந்த வெண்கல சிலை திறப்பில் நடிகர் அஜித்தும் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது,அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தல அஜித்தின் ஆலோசனையின் படி உருவாக்கிய ட்ரோனை வெண்கல சிலை திறப்பில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனை தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.